கோவில்பட்டியில் இருந்து ரூ.12 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு கோவில்பட்டியில் இருந்து நேற்று ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு கோவில்பட்டியில் இருந்து நேற்று ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நிவாரண பொருட்கள் சேகரிப்பு
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதற்காக கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய தாலுகா அலுவலகங்களில் தாசில்தார்கள் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், பால் பவுடர், பிஸ்கட், ரஸ்க், பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இதே போன்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகரசபை அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
பேராவூரணிக்கு...
மொத்தமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை உதவி கலெக்டர் விஜயா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பரமசிவன், நகரசபை என்ஜினீயர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் சுரேஷ், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, தலைமை எழுத்தர் தங்கய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story