கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டி.என்.வி. நிறுவனங்கள் சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண உதவி
டி.என்.வி. நிறுவனங்கள் சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண உதவி டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தர்மபுரி,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி டி.என்.வி. நிறுவனங்கள் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிசி, சமையல் பொருட்கள், ஆடைகள், கொசுவர்த்தி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பொருட்களை டி.என்.வி. பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.என்.சி. செல்வராஜ், இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளர் மாதேஸ்வரன், மேலாளர் சக்திவேல் மற்றும் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story