திருக்கார்த்திகையை முன்னிட்டு தீப விளக்குகள் விற்பனை மும்முரம்


திருக்கார்த்திகையை முன்னிட்டு தீப விளக்குகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 23 Nov 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கோவில்பட்டி, 

திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தீப விளக்குகள்

திருக்கார்த்திகை பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்துக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு வீடுகளில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன கோவில் முன்புள்ள கடைகளில் தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

புதுச்சேரி, மானாமதுரை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்பட்ட தீப விளக்குகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். 3 அடுக்குகளில் 21 தீபங்களை ஏற்றும் வகையிலான அணையா விளக்கு ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விதவிதமான விளக்குகள்

ஒன்பது முக விளக்கு, அலாவுதீன் விளக்கு, சிம்னி விளக்கு, சுவாமி முகங்களுடன் கூடிய விளக்கு, வண்ண விளக்கு போன்றவை ரூ.50 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.50 வரையிலும், பீங்கான் விளக்கு ரூ.2 முதல் ரூ.10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

யானை விளக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையிலும், கண்ணாடி தோரணங்கள் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Next Story