கோபி அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் சாவு


கோபி அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 23 Nov 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மோட்டார்சைக்கிள்- லாரி மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கடத்தூர், 

அந்தியூர் அருகே உள்ள ஆனைக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் தாமரைக்கண்ணன் (வயது 25). தொழிலாளி. இவர் நேற்று காலை கோபியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேலை விஷயமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

கோபி அருகே மூலவாய்க்கால் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாமரைக்கண்ணன் லாரியின் முன்பக்க டயரில் சிக்கினார். இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாமரைக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story