நிதி நிறுவன பெண் ஊழியரிடம் 58 பவுன் நகை மோசடி: மற்றொரு பெண் கைது
தேவகோட்டையில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் 58 பவுன் நகை மோசடி செய்த, மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
தேவகோட்டையை சேர்ந்தவர் செல்வக்குமார். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வினோரியா மலர்மொழி (வயது 35). இவர் தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலைப்பிரிவு ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நிதி நிறுவனத்திற்கு தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை கிராமத்தை சேர்ந்த சிலையப்பன் மனைவி மங்கையர்க்கரசி (35) என்பவர் நகை அடகு வைக்க அடிக்கடி வந்து செல்வாராம்.
அதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்க வேண்டுமெனில் கூடுதல் நகை அடகு பிடிக்க வேண்டும் என மங்கையர்க்கரசியிடம், வினோரியாமலர்மொழி கூறினாராம். இதை பயன்படுத்திக்கொண்ட மங்கையர்க்கரசி, பெண் ஊழியரின் 58 பவுன் நகையை கொடுக்குமாறும், அதை அடகு வைத்து பணம் தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி 58 பவுன் நகையை பெண் ஊழியர் கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக் கொண்ட மங்கையர்க்கரசி, தான் அழைத்து வந்த 4 பெண்களின் பெயரில் நகையை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, ரூ.9 லட்சத்து 72 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் அந்த பணத்தை வினோரியா மலர்மொழியிடம் கொடுக்காமல் சென்று விட்டாராம். இதுகுறித்து நிதி நிறுவனத்திற்கு தெரியவந்த தும், வினோரியா மலர்மொழியின் வேலை பறிபோனது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டிசெல் வம், இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழிவர் மன், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள் வெள்ளைச்சாமி, ஆசீர்வாதம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மங்கையர்க்கரசியை கைது செய்தனர். மேலும் 4 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story