கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் உடலில் இரும்பு கம்பி புகுந்தது அறுவை சிகிச்சை செய்து அகற்றம்


கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் உடலில் இரும்பு கம்பி புகுந்தது அறுவை சிகிச்சை செய்து அகற்றம்
x
தினத்தந்தி 23 Nov 2018 5:02 AM IST (Updated: 23 Nov 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் உடலில் புகுந்த இரும்பு கம்பி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

மும்பை, 

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் உடலில் புகுந்த இரும்பு கம்பி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இரும்பு கம்பி புகுந்தது

மும்பை செம்பூர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் (வயது24) என்பவர் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த கட்டிடத்தில் பணியில் இருந்த அவர் திடீரென 13 அடி உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

இதில், கீழே நீண்டுக்கொண்டு இருந்த ஒரு இரும்பு கம்பி அவரது நெஞ்சின் பக்கவாட்டு பகுதியில் புகுந்து கழுத்து, மூளை பகுதி வழியாக மண்டை ஓட்டையும் துளைத்து கொண்டு வெளியே வந்தது.

அறுவை சிகிச்சை செய்து அகற்றம்

இதைப்பார்த்து மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதைப்பார்த்து டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து 7 டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவரது உடலில் புகுந்து இருந்த 3 அடி நீள இரும்பு கம்பியை அகற்றினர்.

இருப்பினும் ஸ்கேன் பரிசோதனையில் முக்கிய ரத்தநாளங்கள் கம்பி குத்தி கிழித்ததில் சேதம் அடைந்து உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story