தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல் ரூ.1.08 லட்சம் அபராதம்
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வந்த 6 லாரிகளை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வந்த 6 லாரிகளை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
போலீசார் சோதனை
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் புது ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தலா 3 லாரிகளில் ஜிப்சம், நிலக்கரி லோடு ஏற்றி கொண்டு, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு சென்றது தெரிய வந்தது.
லாரிகள் பறிமுதல்
தொடர் சோதனையில் அந்த லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வந்த அந்த 6 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் நிறுத்தினர். அந்த லாரிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதில் அபராத தொகையை செலுத்திய 3 லாரிகள் விடுவிக்கப்பட்டன.
Related Tags :
Next Story