குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எடையளவு குறையாமல் வழங்க வேண்டும் நாமக்கல் கலெக்டர், விற்பனையாளர்களுக்கு உத்தரவு


குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எடையளவு குறையாமல் வழங்க வேண்டும் நாமக்கல் கலெக்டர், விற்பனையாளர்களுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப அட்டைதாரர் களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எடையளவு குறையாமல் வழங்க வேண்டும் என்று நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம, ராசி புரம் வட்டம் கூனவேலமப்ட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் கூனவேலம்பட்டி, மற்றும் பாலப்பாளையம் ஆகிய ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, விற்பனை முனைய கருவியில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும் சரிபார்த்தார். அதனைத்தொடர்ந்து பிள்ளாநல்லூர், முத்துக்காளிப்பட்டி ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அரிசி, மண்எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களின் துணையுடன் சரிபார்த்தார்.

இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா?, விற்பனையாளர் சரியாக வருகின்றாரா? என்று கேட்டறிந்தார். மேலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும்் முழுமையாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் ஆசியா மரியம், விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், ராசிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தர் மற்றும் வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story