தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தொழிலாளி போலீசில் ஒப்படைப்பு


தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தொழிலாளி போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 3:15 AM IST (Updated: 24 Nov 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தொழிலாளி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இட்டமொழி, 

தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தொழிலாளி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஐ.என்.எஸ். கடற்படை தளம்

நெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் உள்ளது. இங்கு கடற்படை தளத்தை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படைவீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலையில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தள பின்பகுதியில் நம்பியாறு அணை அமைந்துள்ள பகுதி வழியாக மர்மநபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் ஏறி அத்துமீறி குதிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பார்த்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

தொழிலாளி

பின்னர் அவரை வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திலகம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கடற்படைத்தளத்தில் ஏறிக் குதிக்க முயன்றவர் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளியான கந்தையா (வயது 65) என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றனர். கந்தையா எதற்காக கடற்படை தளத்துக்குள் நுழைய முயன்றார் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story