கண்கலங்க செய்த மனிதநேயம்: தட்டில் இருந்த பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த பிச்சைக்காரர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள், நிதி சேகரிக்கும் பணியில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்தனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான பிஸ்கட், போர்வை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடையே சேகரித்தனர்.
இவ்வாறு அவர்கள் பொருட்கள் சேகரித்து கொண்டு இருந்த போது, அந்த வழியாக பிச்சைக்காரர் ஒருவர் வந்தார். அவரது கையில் இருந்த தட்டில் சில்லரை காசுகளும், ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அவர் திடீரென நிவாரண பொருட்கள் சேகரித்தவர்களை நிறுத்தினார். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில், தனது தட்டில் இருந்த சில்லரை காசு மற்றும் ரூபாய் நோட்டுகளை அப்படியே தட்டிவிட்டு, பதில் ஏதும் சொல்லாமல் அவர் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றுவிட்டார்.
அந்த பிச்சைக்காரரின் இந்த மனிதநேய செயல் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துவிட்டது.
Related Tags :
Next Story