விருகம்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள் திருடிய இரட்டையர்கள் கைது
விருகம்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள் திருடிய இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார்சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக பொது மக்களிடம் இருந்து புகார் கள் வந்தன. இதையடுத்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு விருகம்பாக்கம் அருணாசலம் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது, அந்த வழி யாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்த னர். அதில் குடிபோதையில் இருந்த அவர்கள், ஏற்கனவே மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும், மீண்டும் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் கள், ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த நந்தகோபால் (வயது 23), சிவபாலன்(23) என்பதும், இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.
நந்தகோபால் ஏ.சி. மெக்கானிக்காகவும், சிவபாலன் டிரைவராகவும் வேலை செய்து வந்தனர். பகல் நேரத்தில் வேலைக்கு செல்லும் இவர் கள், இரவு நேரத்தில் விருகம்பாக்கம், கிண்டி, கோயம் பேடு உள்பட பல்வேறு பகுதியில் வீடுகளுக்கு முன் நிறுத்தி இருக் கும் மோட்டார்சைக் கிள் களை திருடி விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஆடம் பரமாக செலவு செய்து உல்லாசமாக இருந்து வந்தது அவர் களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story