விளை நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரிசெய்யவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


விளை நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரிசெய்யவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 AM IST (Updated: 24 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்யவேண்டும் என்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருக்கனூர்,

திருக்கனூர் மின்துறை அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மின்துறை செயற்பொறியாளர் சஞ்சீவி சேகர் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் இன்பசேகர், இளநிலை பொறியாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருக்கனூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு புகார் தெரிவித்தனர். கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு பகுதியில் விளைநிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்யவேண்டும், மின்அளவை கணக்கிட வரும் பணியாளர்கள் உரிய காலத்தில் கணக்கீடு செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இது பற்றி மின்துறை உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அரியாங்குப்பம் மின் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு உதவிப்பொறியாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இளநிலை பொறியாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அரியாங்குப்பம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காணம் வகையில் இந்த பகுதிக்கென்று தனியாக உயர்அழுத்த மின் பாதை அமைக்கவேண்டும், அவசர உதவிக்கு அழைத்தால் உடனே வரும் வகையில் இரவு நேரத்திலும் மின் ஊழியர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், பல வீடுகளில் மின்கட்டணம் அதிகமாக வருகிறது. எனவே மின்சார மீட்டர் முறையாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டும் என்று பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story