கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுபான்மை மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுபான்மை மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 24 Nov 2018 3:00 AM IST (Updated: 24 Nov 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை மாவட்ட கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதை லாரி மூலம் கலெக்டர் ஷில்பா அனுப்பிவைத்தார்.

நெல்லை, 

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை மாவட்ட கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதை லாரி மூலம் கலெக்டர் ஷில்பா அனுப்பிவைத்தார்.

நிவாரண பொருட்கள்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் அரிசி, பருப்பு, ஆடைகள், போர்வை, பாய் மற்றும் உணவு பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அமைப்பினர் பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பி வருகிறார்கள். நெல்லை மாவட்ட கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் நேற்று லாரி மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறுகையில், நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கஜா புயல் தாக்குதலால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் இன்னல்களை போக்கிடும் வகையில் உணவு பொருட்கள், மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வரப்பெற்றால் தேவைப்படும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story