திருச்சி நகரில் 14 இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது


திருச்சி நகரில் 14 இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகரில் பல இடங்களில் 14 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி,

திருச்சி நகரில் கண்டோன்மெண்ட், உறையூர், வயலூர் சாலை, அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் உள்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் அடிக்கடி திருட்டு போயின. இந்த வழக்குகளில் துப்புதுலக்குவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று திருச்சி தெற்கு ராமலிங்க நகர் முதல் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அவரது பெயர் அப்துல் சுக்கூர் (வயது26) என்பதும், தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்த அவர் வைத்து இருந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் திருச்சி நகரில் பல இடங்களில் 14 இருசக்கர வாகனங்களை திருடியதாக வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 14 இருசக்கர வாகனங்களையும் போலீசார் மீட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 80 ஆயிரமாகும். பின்னர் போலீசார் அப்துல் சுக்கூரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

Next Story