இளைஞர் சக்தி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
உலகில் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும், இளைஞர் சக்தி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
பெங்களூரு,
உலகில் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும், இளைஞர் சக்தி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
எதிர்காலத்தை வடிவமைக்கும்
உலக இளைஞர்கள் மாநாடு நிறைவு விழா சிக்பள்ளாப்பூரில் உள்ள ஸ்ரீசத்யசாய் கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து ெகாண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து பேசியதாவது:-
நமது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 65 சதவீதம் உள்ளனர். இளைஞர்களிடம் சக்தி உள்ளது. அது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை
இளைஞர்களின் திறமை, அறிவு, கற்பனை திறன், போட்டியை சமாளிக்கும் திறன், நம்பிக்கை, இடர்களை எதிர்கொண்டு செயலாற்றும் திறன், பன்முக திறன், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்றவை இந்தியாவின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இளைஞர்களை திறமையானவர்களாக மாற்றினால் மட்டுமே அதிகப்படியான மக்கள்தொகையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் ஆதாயம் பெற முடியும். நமது கல்வி முறை இளைஞர்களுக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
போட்டி மனப்பான்மை
சாய்பாபா, குருநானக் ஆகியோர் இந்திய ஆன்மிக பாதையின் ஒளி விளக்குகள் ஆவார்கள். அவர்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். பக்தி, சேவையாற்ற வழி காட்டினர். இந்திய இளைஞர்கள் உயர்ந்த நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதற்காக உழைக்கிறார்கள். இந்திய கொள்கையில் அவர்கள் வேரூன்றி இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் உலகில் இருக்கும் நல்ல விஷயங்களை இளைஞர்கள் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைய துணிவுடன் செயலாற்ற வேண்டும். அதற்கு போட்டி மனப்பான்மை இருக்க வேண்டும். இந்த இரண்டும் இளைஞர்களிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன்.
முயற்சிகள் வேண்டும்
அரசு நல்ல கொள்கை, திட்டங்களை வகுக்கிறது. நாட்டை வளர்ச்சி அடைய செய்ய மிகப்பெரிய அளவில் முயற்சிகள் வேண்டும். இதில் ெபாதுமக்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஆர்வமாக பங்கேற்றால் மட்டுமே, அது சாத்தியப்படும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
கவர்னர் வஜூபாய் வாலா
இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, மந்திரி சிவசங்கர ரெட்டி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story