கர்நாடக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்


கர்நாடக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

ரூ.45 ஆயிரம் கோடி

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி சொல்கிறார். ஆனால் இதுவரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. குமாரசாமி பொய்யான தகவலை தெரிவித்து மக்களை ஏமாற்று கிறார்.

கடன் தள்ளுபடிக்கான கடிதம்

மாநில அரசிடம் ரூ.45 ஆயிரம் கோடி நிதி இல்லை. வளர்ச்சி பணிகளுக்கே நிதி இல்லாதபோது, விவசாய கடனை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான கடிதம் இதுவரை கிடைக்கவில்லை.

எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி தலா ரூ.2 கோடி ஆகும். இதில் இதுவரை சட்டசபை உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தலா ரூ.1½ கோடியை விடுவிக்க அரசிடம் போதிய அளவுக்கு நிதி இல்லை. கர்நாடக அரசின் நிதி நிலை குறித்து முதல்-மந்திரி குமாரசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

விசித்திரமான ஒலி

எனது போனில் பேசும்போது, ஒருவிதமான விசித்திரமான ஒலி கேட்கிறது. அது தொலைபேசி ஒட்டுகேட்போ, என்னவோ எனக்கு தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடைபெற வேண்டும்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story