அம்பர்நாத் மலையில் பயங்கர காட்டுத் தீ 25 ஆயிரம் மரக்கன்றுகள் எரிந்து நாசம்
அம்பர்நாத் மலையில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் எரிந்து நாசமானது.
அம்பர்நாத்,
அம்பர்நாத் மலையில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் எரிந்து நாசமானது.
காட்டுத் தீ
தானே மாவட்டம் அம்பர்நாத்தில் குண்டோலி மலை உள்ளது. நேற்று மதியம் இந்த மலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென செடி, கொடிகளில் பரவி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. மலையில் தீப்பிடித்து எரிவதை பார்த்த அம்பர்நாத்வாசிகள் தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர். அப்போது, தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எரிந்து கொண்டிருந்தது.
மலையில் உள்ள மரங்களும் எரிந்து நாசமாகி கொண்டிருந்தன. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
மரக்கன்றுகள் எரிந்து நாசம்
தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது.இந்த தீயில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் செடி, கொடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகின. கடந்த ஜூலை மாதம் இந்த மலையில் 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் எரிந்து நாசமாகி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டுத் தீ ஏற்பட்டது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story