வேலூர் கொசப்பேட்டையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
வேலூர் கொசப்பேட்டையில் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
வேலூர்,
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய புயல் காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வேலூர் கன்சால்பேட்டை, பர்மா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது.
வேலூர் கொசப்பேட்டை அமிர்தலிங்கசாமி மடத்தெருவில் அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரம்பாய்ந்து வலுவிழந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவரின் அருகே உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. நல்லவேளையாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மீதமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அந்த சுற்றுசுவர் மின் கம்பத்தின் மீது விழுந்து விபரீதம் ஏற்படலாம். எனவே சுற்றுச்சுவரை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story