சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் ராணுவ வீரர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2018 3:00 AM IST (Updated: 25 Nov 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் விக்டர் ராஜா (வயது 49). முன்னாள் ராணுவ வீரர். இவர் தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள உறவினருக்கு சொந்தமான, வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் கடந்த சில நாட்களாக தங்கி உள்ளார். அந்த கடையில் 36 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் தங்குவதற்கு கடைக்கு அருகே அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு அந்த பெண் தனது 14 வயது மகளுடன் அங்கு தங்கி இருந்தார். அப்போது அங்கு மது போதையில் சென்ற விக்டர் ராஜா, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர் கைது

இதனை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விக்டர் ராஜாவை தாக்கி, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விக்டர் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story