மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஒரு விமானம் வந்தது. சென்னையை சேர்ந்த ராம்கோபால் விக்னேஷ் (வயது 34), விமானத்தில் இருந்து இறங்கிய போது அங்கிருந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியர் பரூக்தீனிடம் (28) ஒரு பையை தந்துவிட்டு குடியுரிமை சோதனைக்கு சென்றதை அதிகாரிகள் கண்டனர்.
சோதனை முடிந்தவுடன் ராம்கோபால் விக்னேஷ் சுங்க இலாகா பகுதியில் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் வகையில் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியே சென்றார். வெளியே வந்த ராம்கோபால் விக்னேசிடம், பரூக்தீன் அந்த பையை திரும்ப ஒப்படைத்தார். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் இருவரையும் சுற்றி வளைத்தனர்.
பின்னர் 2 பேரையும் அழைத்து சென்று விசாரித்தனர். அந்த பையில் செல்போன்கள் ரீசார்ஜ் செய்யும் பவர் பாங்கில் 12 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ரூ.38 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பரூக்தீன் சில தினங்களுக்கு முன் ராம்கோபால் விக்னேஷ் மலேசியாவுக்கு சென்றபோது கடத்தல் பொருட்களை கொண்டு வந்தால் சுங்க இலாகா சோதனையின்றி வெளியே கொண்டு வந்து தருவதாக கூறியுள்ளார். வழக்கமாக காலை பணிக்கு வரவேண்டிய பரூக்தீன் அன்று இதற்காகவே இரவு பணிக்கு மாறி வந்துள்ளார். இதையடுத்து தங்கம் கடத்தி வந்த ராம்கோபால் விக்னேஷ், ஒப்பந்த ஊழியர் பரூக்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story