ஆவியூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ஆவியூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆவியூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நிலையூர் கம்பிக் குடி கால்வாயில் வரும் தண்ணீரை ஆவியூர் கண்மாய்க்கு திறக்க மடை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த மடையின் எதிர்புரம் தனியார் நிறுவனத்தினர் முள்வேலிபோட்டு மறைத்து வைத்திருப்பதாகக் கூறி ஆவியூர் பொதுமக்கள் திரண்டு கால்வாய் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா வருவாய்த்துறையினர் காரியாபட்டி தாலுகா வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சென்று உரிய வருவாய்த்துறை ஆவணங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு மாங்குளம் அருகே உள்ள பூலாபத்தி கண்மாய்க்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆவியூர் கண்மாய்க்கு நேரடியாக கால்வாய் அமைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் ஆவியூர் மற்றும் பாரப்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்களை வைத்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நான்கு வழிச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவியூரில் பரபரப்பு ஏற்பட்டது. அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டது. சமாதான கூட்டத்தில் அரசு விதிமுறைகளின்படியே தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். கூடுதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் கிராமமக்களிடம் அருப்புக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் சமரசம் செய்தார். அப்போது அவர், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story