‘தேசம் காப்போம்' மாநாட்டுக்கு மராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.5½ லட்சம் நிதி தொல். திருமாவளவனிடம் வழங்கப்பட்டது
‘தேசம் காப்போம்' மாநாட்டுக்கு மராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.5½ லட்சம் நிதி அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் வழங்கப்பட்டது.
மும்பை,
‘தேசம் காப்போம்' மாநாட்டுக்கு மராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.5½ லட்சம் நிதி அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் வழங்கப்பட்டது.
நிதியளிப்பு விழா
திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தேசம் காப்போம்' மாநாடு நடக்கிறது. மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்த மாநாட்டுக்கான நிதியளிப்பு நிகழ்ச்சி மும்பை மாட்டுங்கா லேபர்கேம்பில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். சாலமன் ராஜா, பாலன், விசுவநாதன், நல்லரசன், ராஜா குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்து வளவன் வரவேற்று பேசினார்.
ரூ.5½ லட்சம் நிதி
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவரிடம் ‘தேசம் காப்போம்’ மாநாட்டுக்கான நிதி ரூ.5½ லட்சம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை கட்சியின் முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர் சேகர் தொகுத்து வழங்கினார்.
மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், பாதர் சூசை உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story