கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி - அமைச்சர் வீரமணி ஆய்வு


கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி - அமைச்சர் வீரமணி ஆய்வு
x
தினத்தந்தி 25 Nov 2018 4:45 AM IST (Updated: 25 Nov 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணியினை அமைச்சர் வீரமணி ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அழகிரி நகரில் நடைபெற்று வந்த கணக்கெடுப்பு பணியினை அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிப்பு குறித்து முழுமையான கணக்கெடுப்பு செய்ய வேண்டும். இந்த பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என கணக்கெடுப்பு ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றதை, மோட்டார்களை கொண்டு நீரை வெளியேற்றவும், பொது கழிவறையை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என பணியாளருக்கு உத்தரவிட்டார். பின்னர் காட்டுக்காரத்தெரு, கம்பர் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, தாசில்தார் குணசீலி ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story