பச்சைமலையில் கனமழை எதிரொலி: விசுவக்குடி நீர்த்தேக்கம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பச்சைமலையில் கனமழை பெய்ததால் விசுவக்குடி நீர்த்தேக்கம் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையான பச்சைமலையில் வடகிழக்கு பருவமழை வலுத்துள்ளதால், விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. கனமழையால் கோரையாற்றிலும் இருகரையையும் தொட்டுக்கொண்டு வெள்ளநீர் செல்கிறது. பச்சைமலையில் மலையாளப்பட்டி சின்னமுட்டுலுவில் இருந்து உற்பத்தியாகிவரும் கல்லாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அரும்பாவூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டு ஏரியின் கொள்ளளவில் 70 சதவீதத்தை எட்டி உள்ளது.
கடந்த ஆண்டு அரும்பாவூர் பெரியஏரி, சிறிய ஏரி ஆகிய 2 ஏரிகளும் நிரம்பின. இந்த ஆண்டு பருவமழை சீசனிலும் விசுவக்குடி, தொண்டமாந்துறை, அன்னமங்கலம், விஜயபுரம், கோரையாறு ஆகிய பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. ஆனால் தற்போது பெய்துவரும் மழைகாரணமாக தண்ணீர் பஞ்சம் நீங்கியுள்ளது.
பெரம்பலூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. பெரம்பலூர் நகர மக்கள் சமீபகாலமாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பெய்துள்ள 89 மில்லி மீட்டர் மழையால் ஆழ்துளை கிணறுகளிலும் நீர் ஊற்றெடுக்க தொடங்கி உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பெரம்பலூர்-89, வேப்பந்தட்டை-54, தழுதாழை-28, கிருஷ்ணாபுரம்-22, வி.களத்தூர்-39, செட்டிகுளம்-95, பாடாலூர்-42, எறையூர்-25, லெப்பைக்குடிகாடு-84, அகரம்சீகூர்-102, புதுவேட்டக்குடி-37.

Related Tags :
Next Story