புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டூர்,
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர், பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி, சேரி, ஆதிச்சபுரம், குன்னியூர், நெம்மேலி, மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து உணவு முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்களிடமும், விவசாயிகளிடமும் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா பகுதி மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை என்றால் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒரு மாதத்திற்கான பொருட்கள் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என முதல்-அமைச்சர், பிரதமரிடம் கேட்டுள்ளார். மேலும் பயிர்க்காப்பீட்டு பிரிமீய தொகையை காலக்கெடுவிற்குள் தமிழக அரசே செலுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கோட்டூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்மேகம் தலைமையில், அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story