வேதாரண்யம் அருகே பரிதாபம்: புயலால் வீட்டை இழந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
வேதாரண்யம் அருகே புயலால் வீட்டை இழந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ‘கஜா’ புயல் தாக்கி நேற்றுடன் 9 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் புயலால் வீட்டை இழந்தவர்கள், தென்னை மரங்களை இழந்தவர்கள், தேக்கு மரங்களை இழந்தவர்கள், நெல்லி மரங்களை இழந்தவர்கள், சவுக்கு மரங்களை இழந்தவர்கள், படகுகளை இழந்தவர்கள் மனவேதனையுடன் நிவாரண முகாம்களில் உணவுக்காக காத்திருக்கும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த நிலையில் புயலில் கூரை வீட்டை இழந்த விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வேதாரண்யம் அருகே உள்ள பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(வயது 60). விவசாயியான இவர், கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி நள்ளிரவு புயல் காற்றுடன், பலத்த மழை பெய்தபோது இவருடைய கூரை வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் நிவாரண முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்து வந்தார். புயலால் கூரை வீட்டை இழந்ததால் கோபால் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இதுபற்றி தனது உறவினர்களிடம் வருத்தமாக பேசி வந்தார்.
உறவினர்கள் ஆறுதல் கூறியும் மனவேதனை தீராததால் நேற்று முன்தினம் கோபால், அந்த பகுதியில் உள்ள முந்திரி மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story