திருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது


திருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே சாலை ஓரம் நிறுத்தி இருந்த மினி டெம்போவில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் மற்றும் ஈக்காட்டில் உள்ள கல்யாண பெருமாள் கோவிலுக்கு ஆந்திர மாநில கவர்னர் லட்சுமிநரசிம்மன் சாமி கும்பிட தனது குடும்பத்தினருடன் வந்தார்.

அப்போது பாதுகாப்பில் இருந்த திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் கோவில் அருகே வெகு நேரமாக அட்டை பெட்டிகள் ஏற்றப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்த மினி டெம்போவை சோதனை செய்தனர்.

அந்த டெம்போவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 40 அட்டை பெட்டிகளில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

இது தொடர்பாக ஈக்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பொன்ராஜ் (வயது 52) என்பவரை புல்லரம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மினி டெம்போ உரிமையாளர், டிரைவர், கிளனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story