மாடம்பாக்கத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து ஆடைகள் திருட்டு


மாடம்பாக்கத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து ஆடைகள் திருட்டு
x
தினத்தந்தி 26 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

மாடம்பாக்கத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து ஆடைகள் திருடப்பட்டன.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் முக்கிய சாலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 42), இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 23-ந்தேதி காலை கடையை திறக்க வந்த போது கடையின் சிமெண்டு மேற்கூரையை உடைத்து அதன் வழியாக திருடர்கள் கடைக்குள் புகுந்தது தெரியவந்தது.

கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த ஆடைகள் மற்றும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உபகரணங்கள் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து லோகநாதன் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story