கிண்டியில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பதிவு தபால் வந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே தனியாருக்கு சொந்தமான ‘லீ ராயல் மெரிடியன்’ என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் நிர்வாக இயக்குனர் பெயருக்கு பதிவு தபால் ஒன்று வந்தது.
அதை பிரித்து பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், “உங்கள் ஓட்டலில் வெடிகுண்டு வைத்து உள்ளோம். அது விரைவில் வெடிக்கும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து பரங்கிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
வெடிகுண்டு நிபுணர் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து ஓட்டல் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை.
நட்சத்திர ஓட்டலுக்கு வந்த கடிதத்தை போலீசார் படித்து பார்த்தனர். அதில், ஆங்கிலத்தில் பிழையாக எழுதப்பட்டு இருந்தது. அதில் உண்மைத்தன்மை இல்லை என்று தெரியவந்தது. எந்த தேதியில் குண்டுவெடிக்கும் என்பது அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து போலீசார் கூறும்போது, “நட்சத்திர ஓட்டலுக்கு வந்த கடிதத்தை படித்தபோது அதில் ஆங்கிலத்தில் பிழையாக எழுதப்பட்டு இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட யாராவது இதுபோல் கடிதத்தை எழுதி இருக்கலாம் என தெரிகிறது. எனினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அந்த கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Related Tags :
Next Story