திருவேற்காடு போலீஸ் நிலையம் முன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
திருவேற்காடு போலீஸ் நிலையம் முன் உடலில் டீசலை ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
திருவேற்காட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32). சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளை சேகரித்து அருகில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து வருகிறார்.
இவருக்கும், பழைய இரும்பு கடைக்காரர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. பாஸ்கருக்கு சொந்தமான சைக்கிளை, திருட்டு சைக்கிள் என்று கூறி அந்த பழைய இரும்பு கடைக்காரர் பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் செய்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போதை தெளிந்த பிறகு வரும்படி கூறி புகாரை வாங்காமல் அவரை போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி திடீரென தனது உடலில் டீசலை ஊற்றியபடி ஓடிவந்து போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பாய்ந்து சென்று பாஸ்கரை தடுத்து நிறுத்தி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்டு மாதம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில், போலீசாரின் விசாரணை ஒரு தலைபட்சமாக இருப்பதாக கூறி ரேணுகா என்ற பெண், திருவேற்காடு போலீஸ் நிலையம் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story