எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்
எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.
கன்டெய்னர் லாரி
ராஜபாளையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் கைத்தறி நூல் பண்டல்கள் ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்தது. அந்த லாரியை தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் தவசிபெருமாள் என்பவர் (வயது 41) ஓட்டிவந்தார்.
எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே, தூத்துக்குடிக்கு செல்லும் வளைவு சாலையில் லாரி திரும்பியது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் இடது பக்கமாக கவிழ்ந்தது. இதில் டிரைவர் தவசிபெருமாள் காயம் அடைந்தார்.
உயிர்சேதம் தவிர்ப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். அந்த லாரி கவிழ்ந்த இடத்திற்கு அருகே ஒரு டீக்கடை உள்ளது. அந்த கடையில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும். பலர் அந்த கடை அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருப்பார்கள். சம்பவம் நடந்த போது அங்கு ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story