சேலத்தில், குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
சேலம் சொர்ணபுரி போயர் தெருவை சேர்ந்தவர் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை (வயது 20). இவர்களுக்கு கமலேஷ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வீட்டில் தெய்வானை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தெய்வானையின் பெற்றோர், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தெய்வானைக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் அவருடைய தற்கொலை குறித்து சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.
வரதட்சணை கொடுமையால் தெய்வானை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் அவர் விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story