திசையன்விளை அருகே பரிதாபம் உழவு எந்திரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவன் பலி
திசையன்விளை அருகே உழவு எந்திரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே உழவு எந்திரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளிக்கூட மாணவன்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் சந்திரன், விவசாயி. அவருக்கு சொந்தமான வயல் அந்த பகுதியில் உள்ளது. இவருடைய மகன் மனோ வெங்கடேஷ் (வயது 12). இவர் மன்னார்புரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் மனோ வெங்கடேஷ் தங்களுக்கு சொந்தமான வயலுக்கு சென்றிருந்தான்.
உழவு எந்திரத்தில் சிக்கி பலி
பின்னர் சிறிய ரக உழவு எந்திரத்தின் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் எந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் மனோ வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story