பர்கூர் அருகே பரிதாபம் மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு


பர்கூர் அருகே பரிதாபம் மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மின்வேலியில் சிக்கிய வாலிபர் பரிதாபம் இறந்தார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பாலக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 26). தொழிலாளி. இவருக்கும் பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட கள்ளிமடை குட்டை பகுதியை சேர்ந்த சுதா (22) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கருத்துவேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தங்கராசு கள்ளிமடை குட்டை பகுதிக்கு வந்தார்.

தற்போது அந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நிலங்களின் ஓரத்தில் மின்வேலி அமைத்து உள்ளனர். இந்த மின்வேலியில் தங்கராசு எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மின்வேலியின் சிக்கி இறந்து கிடந்த தங்கராசுவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த தங்கராசுவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story