சத்துணவு மையங்களை இணைக்க கூடாது ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


சத்துணவு மையங்களை இணைக்க கூடாது ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Nov 2018 3:00 AM IST (Updated: 26 Nov 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு மையங்களை இணைக்க கூடாது என ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நெல்லை, 

சத்துணவு மையங்களை இணைக்க கூடாது என ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அறிக்கை

இதுதொடர்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் சேவியர் ஜார்ஜ் ரவீந்திரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் ராஜூ ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தமிழக அரசு 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களில் உள்ள 400 சத்துணவு மையங்களை துணை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் 1,200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் குறைவாக உள்ள துணை மையங்களில் ஒரு உதவியாளரை நிரந்தரமாக பணி செய்ய நியமிக்க வேண்டும்.

நாளை ஆர்ப்பாட்டம்

இதை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story