உடன்குடியில் சீட்டு நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


உடன்குடியில் சீட்டு நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Nov 2018 2:30 AM IST (Updated: 26 Nov 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியை சேர்ந்த ராஜா. இவர் அந்த பகுதியில் சீட்டு நிறுவனம்(சிட்பண்ட்) நடத்தி வந்தார்.

தூத்துக்குடி, 

உடன்குடியை சேர்ந்த ராஜா. இவர் அந்த பகுதியில் சீட்டு நிறுவனம்(சிட்பண்ட்) நடத்தி வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் சேர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களிடம் பணம் வசூல் செய்து உள்ளார். 

இந்த நிலையில் அவர்கள் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்திய வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த சின்னத்துரை மற்றும் 7 பேர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடம் புகார் மனு கொடுத்தனர். 

அவர், மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வைகுண்டம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜா உள்பட 2 பேரையும் தேடிவருகின்றனர்.


Next Story