நிவாரண முகாமில் தங்கியிருந்த மூதாட்டி உள்பட 2 பேர் சாவு


நிவாரண முகாமில் தங்கியிருந்த மூதாட்டி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2018 3:15 AM IST (Updated: 26 Nov 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண முகாமில் தங்கியிருந்த மூதாட்டி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

திருத்துறைப்பூண்டி, 


திருத்துறைப்பூண்டி அருகே மணலி கிராமத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள புயல் நிவாரண முகாமில் மணலி எம்.கே.நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தீனதயாளன் (வயது49) என்பவர் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து முகாமில் இருந்த நடமாடும் மருத்துவகுழுவினர் அவரை பரிசோதித்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீனதயாளன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கோமாளப்பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி பக்கிரியம்மாள் ( 85). இவரது கணவர் இறந்து விட்டார். பக்கிரியம்மாள் கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். கஜா புயலால் இவருடைய குடிசை வீடு சேதம் அடைந்து விட்டது. இதனால் கடந்த 17-ந் தேதி முதல் கோமளாப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் பக்கிரியம்மாள் தங்கி இருந்தார்.

தனது குடிசை வீட்டையும் இழந்து விட்டோம். நமக்கு இனி யார் உதவி செய்வார்கள்? எங்கே தங்குவது என கவலையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் பக்கிரியம்மாள் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story