நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்ததால் மாநிலம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து
நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்ததையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்ததையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சினிமா காட்சிகள் ரத்து
கன்னட திரையுலகின் பிரபல நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பரீஷ் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார். நடிகர் அம்பரீஷ் மரணத்திற்கு கன்னட திரையுலக பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்ததால் நேற்று மாநிலம் முழுவதும் சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் படப்பிடிப்புகள் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை.
இதுகுறித்து கர்நாடக சினிமா வர்த்தக சபையின் தலைவர் சென்னேகவுடா நிருபர்களிடம் கூறுகையில், ‘நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்திருப்பது கன்னட திரையுலகத்திற்கு பேரிழப்பாகும். மிகப்பெரிய நடிகரை கன்னட திரையுலகம் இழந்து விட்டது.
படப்பிடிப்புகளும் நிறுத்தம்
நடிகர் அம்பரீஷ் மறைவு காரணமாக மாநிலம் முழுவதும் இன்று (அதாவது நேற்று) சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தப்பட்டு இருக்கிறது,’ என்றார்.
Related Tags :
Next Story