விமானம் மூலம் பார்சல்களில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் சீன நாட்டினர் உள்பட 6 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் பார்சல்களில் கடத்தி வந்த ரூ.3 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சீன நாட்டினர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் பார்சல்களில் கடத்தி வந்த ரூ.3 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சீன நாட்டினர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் கடத்தல்
மும்பை விமான நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவுக்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த பார்சல்களை சம்பவத்தன்று சோதனை செய்யும் பணி நடந்தது. இதில் பார்சல்களை ஸ்கேனிங் செய்தபோது, ஒரு பார்சலில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதிரடியாக அந்த தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதை கடத்தி வந்தவர்களை பிடிப்பதற்காக அந்த பார்சலில் இருந்த முகவரி பற்றி விசாரித்தனர். இதில், அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பார்சல் வினியோகம் செய்யாமல் அங்கேயே வைக்கப்பட்டது.
6 பேர் கைது
இந்தநிலையில் அந்த பார்சலை வாங்க வந்த சீனா நாட்டை சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கூரியர் நிறுவனம் உதவியுடன் சட்டவிரோதமாக பார்சலில் மறைத்து தங்கக்கட்டிகள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பவாய், சாந்திவிலியில் உள்ள குறிப்பிட்ட கூரியர் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கும் பார்சல்களில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் சிக்கின. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
இந்த கடத்தலில் தொடர்புடைய கூரியர் நிறுவன உரிமையாளர்கள் அஜய், விஜய் மற்றும் சீன நாட்டினர் 4 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story