அகிலத்திரட்டை பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் அய்யாவழி மாநாட்டில் வலியுறுத்தல்
அகிலத்திரட்டை பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அய்யாவழி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நாகர்கோவில்,
அய்யாவழி மாநாடு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று நடந்தது. அய்யாவின் அவதார தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை விட வேண்டும். அகிலத்திரட்டு அம்மானை, திருஅருள்நூல் ஆகமங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவசியம். அய்யாவழி வங்கி மற்றும் தொலைக்காட்சி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த மாநாடு நடைபெற்றது.
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அய்யா வைகுண்டர் அரசு மருத்துவக் கல்லூரி என்று பெயர் வைக்க வேண்டும். அய்யா கோவில் இல்லாத மாவட்டங்களில் புதிதாக கோவில்களை நிறுவ வேண்டும், அகிலத்திரட்டு அம்மானை மற்றும் திருஅருள்நூல் ஆகமங்களை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவையும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு குமரி மாவட்ட அய்யாவழி தலைவர் திருமால் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பத்மாவதி வரவேற்றார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். நிறுவன தலைவர் தங்க மோகனன், தேசிய பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் கவிமணி ஆகியோர் பேசினார்கள்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியபோது, “அய்யாவின் அவதார தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடுவதும், அகிலத்திரட்டு அம்மானை, திருஅருள் நூல் ஆகமங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதும் கட்டாயம் தேவை. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து செயல்படுத்த வேண்டும். அதிலும் அகிலத்திரட்டு அம்மானை மற்றும் திருஅருள்நூல் ஆகமங்களை பிற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தல் அவசியம் என்ற அய்யாவழி மக்களின் கோரிக்கையை சரியாக செய்தால் மற்றவை அனைத்தும் தானாகவே நடைபெறும்“ என்றார்.
முடிவில் நலத்திட்ட உதவிகளாக தையல் எந்திரம், சேலை வழங்கப்பட்டன. இவற்றை வசந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் அய்யாவழி நிர்வாகிகள் வழங்கினர். அதைத் தொடர்ந்து நாகராஜா கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story