பெரணமல்லூர் அருகே எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்மநபர்கள் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


பெரணமல்லூர் அருகே  எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்மநபர்கள்  அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:30 AM IST (Updated: 26 Nov 2018 6:39 PM IST)
t-max-icont-min-icon

பெரணமல்லூர் அருகே எம்.ஜி.ஆர்.உருவ சிலையை மர்மநபர்கள் உடைத்ததை கண்டித்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கொருக்காத்துர் கிராமத்தின் நுழைவு பகுதியில் எம்.ஜி.ஆர். உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த சிலையை உடைத்து உள்ளனர். இதில் சிலையின் கை பகுதி சேதம் அடைந்து உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க.வினர் 100–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் கிளை செயலாளர் சண்முகம் தலைமையில் வாழைப்பந்தல் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் எம்.ஜி.ஆர். சிலை உடைந்த மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுகி அளித்தனர்.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரணமல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story