ஓசூரில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை


ஓசூரில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 9:40 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ள தாம்சனப்பள்ளியைச் சேர்ந்தவர் மாதப்பன். இவரது மனைவி எர்ரம்மா (வயது 55). இவர் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே கொத்தூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த எர்ரம்மா வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்தார்.

இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் எர்ரம்மா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று எர்ரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற முருகேசன். இவரது மகன் மெய்ஞானம் (21). இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் குமதேப்பள்ளி அருகில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மெய்ஞானம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று மெய் ஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 தற்கொலைகள் குறித்தும் ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story