புயல் நிவாரண நிதிக்கு தனிநபர் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டாம் தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்
கஜா புயல் நிவாரண நிதிக்கு தனிநபர் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண உதவி தினமும் ரூ.250 வழங்கப்படுகிறது. அதன்படி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 5 மீனவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மற்ற 3 பேர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் பேசி வருகின்றனர்.
மக்காச்சோளம் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு பிரிமியம் செலுத்தினால், பயிர் இழப்புக்கு காப்பீடு தொகை கிடைக்கும். இந்த பாதிப்பு குறித்து அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சியில் பஸ் நிலையம் விரிவாக்க பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஜிப்சம் அகற்றும் பணி நடக்கிறது. தாமிர தாது அகற்றும் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 15 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கஜா புயல் நிவாரணம் சேகரிப்பதாகவும், தனிநபர் வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள் என்று கூறப்படுவதாகவும் தெரிகிறது. தனிநபர் வங்கி கணக்குகளில் பணம் செலுத்துவதால் ஏமாற்றும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் தனிநபர் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வேண்டாம். நிவாரண நிதி வழங்க விரும்புகிறவர்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கோ, மாவட்ட கலெக்டரிடமோ வழங்கலாம். இதுதவிர நிவாரண பொருட் கள் சேகரிப்பதற்காக கலெக் டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மக்கள் நிவாரண பொருட்களை வழங்கலாம்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story