வேலை கிடைக்காத விரக்தி: என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை - தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்டார்
வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி தனக்கு தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் நவீன் சுபாஷ் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் தனது தாத்தா செல்லமுத்துவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தாத்தா வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது நவீன்சுபாஷ் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உடனே கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், அவர் வேலைகிடைக்காத விரக்தியில் கழுத்தில் தனக்குதானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.என்றாலும் அவரது இறப்பில் சந்தேகமிருப்பதாகவும் கூறினர்.
தொடர்ந்து நவீன்சுபாஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
நவீன்சுபாஷின் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அவரது தாய் பூங்கொடியும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் வீடுகளில் நவீன்சுபாஷ் சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் என்ஜினீயரிங் படித்தும், அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். தனது நண்பர்களிடம், வேலைக்கு போகாமல், உறவினர்கள் வீடுகளில் சாப்பிட பிடிக்கவில்லை என்று விரக்தியில் பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு நவீன்சுபாஷின் தாத்தா செல்லமுத்துவிடம் நான் வேலைக்கு கோவா செல்கிறேன். மனசு சரியில்லை என்று கூறினார். அதற்கு அவரது தாத்தா எதுவும் நினைக் காதே எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறி விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, நவீன்சுபாஷ் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
தற்போது தற்கொலை வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கழுத்தில் ஆழமாக கத்தி குத்தப்பட்டு இருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே யாராவது கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுவிவரமும் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story