சொந்த ஊரான மண்டியாவில் அம்பரீசின் உடலுக்கு 2 லட்சம் பேர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி
சொந்த ஊரான மண்டியாவில் அம்பரீசின் உடலுக்கு 2 லட்சம் பேர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் விடிய, விடிய கூடியிருந்து மக்கள் பிரியாவிடை கொடுத்த உருக்கமான சம்பவம் அங்கு நடந்தது.
மண்டியா,
மறைந்த நடிகர் அம்பரீசின் சொந்த ஊர், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா தொட்டரசினகெரே கிராமமாகும். இவர் இறந்த செய்தியை கேட்டு அந்த ஊரில் உள்ள அவரது உறவினர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் அம்பரீசின் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் மண்டியா முழுவதும் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை அறிவிக்கப்படாத முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மளிகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும் அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. வாடகை கார்கள், ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அத்துடன் நடிகர் அம்பரீசுக்கு இரங்கல் தெரிவித்து நகரின் பெரும்பாலான சாலைகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தன. அதுபோல் பல்வேறு அமைப்பினரும் மண்டியாவின் மகன் அம்பரீசுக்கு இரங்கல், மண்ணின்மைந்தன் அம்பரீசுக்கு அஞ்சலி என ஏராளமான பேனர்களையும் ஆங்காங்கே வைத்திருந்தனர்.
அஞ்சலி செலுத்துவதற்காக அம்பரீசின் உடல் வருவதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்திருந்தனர். அவரது உடல் வந்ததும் ரசிகர்களும், பொதுமக்களும் குழந்தைகளுடன் வந்து அம்பரீசின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சில ரசிகர்கள் உணர்ச்சி ெபருக்கிலும், துக்கம் தாளாமலும் கண்ணீர் விட்டு கதறி துடித்தனர். சில ரசிகர்கள் துயரத்தில் கீழே உருண்டு அழுதனர்.
அஞ்சலி செலுத்த வந்தவர்கள், அஞ்சலி செலுத்திவிட்டு மைதானத்திலேயே நின்றிருந்தனர். இதனால் மைதானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர். இதனால் ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மேலும் அங்கிருந்த நடிகர் யஷ், அம்பரீசின் மகன் அபிஷேக் ஆகியோர் ரசிகர்கள், பொதுமக்களை அமைதிகாக்கும் படி கேட்டுக்கொண்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ரசிகர்களும், மக்களும் வரிசையில் நின்று விடிய, விடிய அஞ்சலி செலுத்தினர். அம்பரீசின் சொந்த ஊரை சேர்ந்த மக்களும் திரண்டு வந்து அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மண்டியா மகனுக்கு ஜெய், அண்ணனுக்கு ஜெய், மீண்டும் பிறந்துவா அண்ணா... என உருக்கமான கோஷங்களை எழுப்பியப்படி இருந்தனர்.
இதனால் மைதானமே உணர்ச்சி பெருக்குடன் காட்சி அளித்தது. நேற்று காலையிலும் நடிகர் அம்பரீசின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இதனால் காலை 6 மணிக்கு பெங்களூருவுக்கு அவரது உடல் எடுத்துச்செல்ல முடிவு செய்திருந்த திட்டம் கைவிடப்பட்டது. அதேவேளையில் மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக கூடுதலாக 3 மணி நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அப்போதும் ஏராளமானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்படி இருந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை. இருப்பினும் காலை 10.30 மணி அளவில் நடிகர் அம்பரீசின் உடல் பெங்களூருவுக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் தயாராகின. காலை 10.50 மணி அளவில் அம்பரீசின் பூத உடல் ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மைதானத்தில் கூடியிருந்தவர்கள் கண்ணீர் மல்க, அம்பரீசின் உடலுக்கு பிரியாவிடை அளித்தனர். அம்பரீசின் உடலை ஹெலிகாப்டர் சுமந்து கொண்டு பறக்க தொடங்கிய பிறகே அங்கு கூடியிருந்தவர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நடிகர் அம்பரீசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையொட்டி சுமார் 2,500 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மண்டியா டவுன் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நடிகர் அம்பரீசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விவசாயிகள், ரசிகர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அம்பரீசின் மறைவால் மண்டியா மாவட்ட மக்கள் துக்க கடலில் மூழ்கியுள்ளனர்.
சோகத்தில் மண்டியா மக்கள்
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே கனகனமரடி கிராமத்தின் அருகே கடந்த24-ந்தேதி தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் பலியானார்கள். இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தால் மண்டியா மாவட்ட மக்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
அன்றைய தினம் மாலை அந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி கர்நாடக மக்களுக்கும் நடிகர் அம்பரீசின் மரணம் பேரிடியாக அமைந்துவிட்டது. மண்டியா மாவட்ட மண்ணின் மைந்தன் என அழைக்கப்பட்ட அம்பரீஷ் இறந்ததும் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் கதறி துடித்தனர். அவரது உடல் அஞ்சலிக்காக மண்டியாவுக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டதும் ஆயிரக்கணக்கானோர் விடிய, விடிய அஞ்சலி செலுத்தினர். அத்துடன் இரவு முழுவதும் அங்கேயே இருந்த அவர்கள், நேற்று காலை அம்பரீஷ் உடல் பெங்களூரு எடுத்துச்செல்வது வரை இருந்தனர். அடுத்தடுத்து விபத்தில் 30 பேர் சாவு, நடிகர் அம்பரீஷ் மரணம் ஆகியவற்றால் மண்டியா மாவட்ட மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பெங்களூருவில் இருந்து நடிகர் அம்பரீசின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல் ரசிகர்கள், மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக மண்டியா விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வைக்கப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story