முதல்–அமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் 10,568 பேருக்கு சிகிச்சை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் முதல்–அமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் 1 0 ஆயிரத்து 568 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் முதல்–அமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் 1 0 ஆயிரத்து 568 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காப்பீடு திட்டம்தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், கண் நோய், காது, மூக்கு, தொண்டை நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், பொதுவான அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சை உள்ளிட்ட 1027 நோய்களுக்கு சிகிச்சையும், 38 நோய்களுக்கு பரிசோதனையும், அதனுடன் தொடர்புடைய 113 தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
ரூ.15¼ கோடிதூத்துக்குடி மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2017–18–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 286 பேருக்கு ரூ.35 கோடி செலவிலும், நடப்பு ஆண்டில் இதுவரை 10 ஆயிரத்து 568 பேருக்கு ரூ.15 கோடியே 38 லட்சம் செலவிலும் பல்வேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மக்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.