தூத்துக்குடி அருகே ரே‌ஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு


தூத்துக்குடி அருகே ரே‌ஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 28 Nov 2018 2:30 AM IST (Updated: 27 Nov 2018 5:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே ரே‌ஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே ரே‌ஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

ஆய்வு

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் ரே‌ஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மண்எண்ணெய், துவரம்பருப்பு உளுந்தம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவைகளில் இருப்பு குறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்படி அரிசி 38 கிலோ, சீனி 64½ கிலோ, கோதுமை 12 கிலோ, மண்எண்ணெய் 10 லிட்டர் முறைகேடாக விற்பனை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அபராதம்

இதைத் தொடர்ந்து முறைகேடுகள் புரிந்த விற்பனையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 779 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. அதே போன்று ரூ.675 மதிப்பிலான பொருட்கள் இருப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவலை தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்து உள்ளார்.


Next Story