கம்பத்தில்: ஆக்கிரமிப்பால் காணாமல் போன குளத்தை மீட்ட அதிகாரிகள்


கம்பத்தில்: ஆக்கிரமிப்பால் காணாமல் போன குளத்தை மீட்ட அதிகாரிகள்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:00 AM IST (Updated: 27 Nov 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால் காணாமல் போன சிக்காலி குளத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கம்பம், 

கம்பத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் மலையில் இருந்து பெருக் கெடுத்து வரும் தண்ணீர், ஓடைகள் வழியாக கம்பம்- ஏகலூத்து சாலை அருகே உள்ள ஆலமரத்துக்குளம், சிக்காலி ஆகிய குளங்களுக்கு வந்து சேரும். இந்த குளங்களின் நீரை நம்பி சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு மற்றும் தட்டை, பாசிப்பயறு உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

மேலும் குளத்தின் தண்ணீர் கால்நடைகளுக்கு குடி நீராகவும் பயன்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளங் களை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய தொடங்கினர். இத னால் குளங்களின் நீர்வரத்து வாய்க்கால்களும் மூடப் பட்டது. இதன் காரணமாக மழைக்காலங்களில் குளங் களுக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. மானாவாரி பயிர் விவசாயம் கேள்விக்குறி யானது. இதைத்தொடர்ந்து குளங்களில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்றி, வரத்து வாய்க் காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆல மரத்துக்குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஆக்கிரமித்து பயிரிடப் பட்டு இருந்த விவசாய பயிர்கள் அகற்றப்பட்டு குளத் துக்கு வாய்க்கால் மூலம் நீர் வரத்து ஏற்பட வழிவகை செய்தனர். ஆனால் கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காலி குளம் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படா மல் இருந்தது. இதனால் குளம் இருந்த அடையாளம் இல்லா மல் காணாமல் போனது. விவசாயி கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.

இதையடுத்து சிக்காலி குளத்தில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என்று கம்பம் பாப்பச்சகவுடர் தெருவை சேர்ந்த விவசாயிகள் சார்பில் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனு கொடுத் தனர். அந்த மனு மீது கம்பம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சிக்காலி குளத்தை வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் அரசு ஆணை 540-ன் படி குளத்தில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர் பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பாஸ் கரன் மற்றும் அரசு அதிகாரிகள் சிக்காலி குளத் துக்கு வந்தனர். அங்கு பொக் லைன் எந்திரத்தின் மூலம் குளத்தை ஆக்கிரமித்து நடப் பட்டு இருந்த புளிய மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த னர். அங்கு கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பு லட்சுமி தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக குளத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றியதால் அப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story