ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியானார்.
ஊத்துக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் கணேஷ்குமார் (வயது 29). என்ஜினீயர். இவர் சென்னை கிண்டியில் உள்ள ஜ.டி. நிறுவனதத்ில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கணேஷ்குமார் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கமுதியை சேர்ந்த என்ஜினீயர் விக்னேஷ் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கோனே பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றார்.
அங்குள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த அவர்கள் மீண்டும் சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். விக்னேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்ட கணேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.
விக்னேஷ் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டினர். கணேஷ்குமார் ஹெல்மெட் அணியவில்லை. ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீர் என்று மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கணேஷ்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவ்வாறு செல்லும் வழியிலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story