மகனின் கள்ளக்காதலால் ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டது அம்பலம் 2 பேர் கோர்ட்டில் சரண்
குன்றத்தூர் அருகே ஆண் பிணம் மீட்பு வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மகனின் கள்ளக்காதலில் ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.
பூந்தமல்லி,
வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் சர்வீஸ் சாலையில் கடந்த 21-ந்தேதி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இறந்து போனவர் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்த கொலை தொடர்பாக 2 பேர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்கள் கூடுவாஞ்சேரி நாதன் நகரை சேர்ந்த சுரேந்தர் என்ற சிவா (வயது 32) மற்றும் அவரது நண்பரான சின்னமலை வெங்கடாபுரத்தை சேர்ந்த பாலாஜி (32) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கண்டிகை, வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (45). ஆட்டோ டிரைவர். தாம்பரம் கஸ்தூரிபாய்நகர், கல்யாணசுந்தரம் தெருவில் மனைவி பாத்திமாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் கண்டிகைக்கு குடித்தனம் சென்றுள்ளார்.
இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் அசாருதீன்(24), ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுரேந்தரின் மனைவி சுமதி (30), அடிக்கடி தாம்பரம் செல்லும்போது அசாருதீனின் ஆட்டோவில் செல்வார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இது சுரேந்தருக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சுமதி அசாருதீனுடன் சென்று விட்டார். அசாருதீன் இருக்கும் இடம் குறித்து அவரது தந்தை சையது இஸ்மாயிலிடம், சுரேந்தர் கேட்டு வந்துள்ளார். அதற்கு அவர் சரியான பதில் கூறாமல் இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தனது நண்பரான பாலாஜியுடன் சேர்ந்து மணிமங்கலத்தில் ஆட்டோ ஓட்டி சென்ற சையது இஸ்மாயிலை வழிமறித்துள்ளார்.
அவரிடம் சுரேந்தர் தன்னுடைய மனைவி எங்கு இருக்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தெரியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் அருகில் இருந்த கட்டையை எடுத்து சையது இஸ்மாயில் தலையில் அடித்து கழுத்தை நெரித்துள்ளார். இதில் சையது இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ஆட்டோவில் சையது இஸ்மாயில் உடலை எடுத்து சென்று குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வீசி விட்டு ஆட்டோவை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக போலீசார் தலைமறைவாக இருந்த சுரேந்தரை தேடி வந்துள்ளனர். அவரது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி உள்ளனர். போலீசார் தங்களை பிடித்து விடுவார்கள் என்று பயந்து போன சுரேந்தர், பாலாஜி இருவரும் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story